தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது .
இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் செல்ல பாப்பா தலைமை வகித்தார் இதில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு நகர்புற மதிப்பீடு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் பணியாளர்களின் எதிர்கால நலன் கருதி வருங்கால வைப்பு நிதி காப்பீடு உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் மருத்துவம் மற்றும் விபத்து கால விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





0 Comments