// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சி ஏர்போர்ட் அன்பு நகரில் உள்ள அல்ஹுதா ஆர்பனேஜ் கல்வி நிறுவனத்தின் 32வது ஆண்டு விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி ஏர்போர்ட் அன்பு நகரில் உள்ள அல்ஹுதா ஆர்பனேஜ் கல்வி நிறுவனத்தின் 32வது ஆண்டு விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், அன்பு நகரில் இயங்கி வரும் அல்ஹுதா ஆர்ஃபனேஜ் கல்வி நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழா நிகழ்வு அந்நிறுவனத்தின் தாளாளர் அப்துல் மஜீத் அவர்கள் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவரையும் மகிழ்ச்சியுரச் செய்தார். 


மேலும் அவர் பேசுகையில் அரசு பள்ளிகளுக்கு திராவிட மாடல் அரசு செய்து வரும் பல்வேறு முன்னணி திட்டங்களை விவரித்து பேசினார். பெற்றோர்கள் மாணவர்களிடையே பின்பற்றப்பட வேண்டிய சமூக உறவுமுறை குறித்து விளக்கினார்.

இதில் புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரி உரிமையாளர்கள் ஹாஜி காஜா நஜிமுதின், ஹாஜி ஜமால் முகமது சாஹிப், IUML தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், JAQH தலைவர் பெருமதிப்பிற்குரிய ஷேக் கமாலுதீன் மதனி, பொதுச்செயலாளர் ஷேக் ரஹ்மத்துல்லாஹ் பிர்தௌஸி, குளச்சல் நூர் முகமது, கோட்டத் தலைவர் மதிவாணன் உட்பட சான்றோர் பெருமக்கள் மற்றும் மஜக மாநில இளைஞர் அணிச் செயலாளர் திருச்சி ஷரிப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.


மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் பெருமகிழ்ச்சியோடு தங்கள் பங்களிப்பை அளித்தனர்.

Post a Comment

0 Comments