// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் பழைய கோவில் கத்தோலிக்க சங்கம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை திருச்சி எடத்தெரு பழைய கோவில் வளாகத்தில் இன்று நடத்தியது. இந்த முகாமிற்கு பழைய கோவில் பங்கு தந்தை அந்தோணி சாமி ஆசியுறை வழங்கினார். திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜர் மற்றும் உதவி பங்கு தந்தை சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினராக மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா கலந்து கொண்டார். முன்னதாக கத்தோலிக்க சங்க தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றிட, சங்கத் தலைவர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். இந்த இலவச சித்த மருத்துவ முகாமில் தர்ம நாதபுரம், இருதயபுரம், மல்லிகைபுரம், அன்னை நகர், மரியம் நகர், படையாச்சி தெரு, எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.



இந்த இலவச சித்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பழைய கோவில் கத்தோலிக்க சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்

Post a Comment

0 Comments