// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** வீர முத்தரையர் சங்க தலைவரை கைது செய்யக்கோரி ஐ. ஜி அலுவலகத்தில் பெண் புகார்

வீர முத்தரையர் சங்க தலைவரை கைது செய்யக்கோரி ஐ. ஜி அலுவலகத்தில் பெண் புகார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சத்தியா பொன்னழகன் . இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தியா இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ ஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது...


முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த நான் பொது சேவையும், மக்கள் பணியும் ஆற்றி வருகிறேன். தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று கல்விக்காகவும், முத்தரையர் சமுதாய மக்களுக்கும் விழிப்புணர்வு செய்து வருகிறேன். இதனை நான் செய்யக்கூடாது என்று வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.செல்வக்குமார் என்பவரின் தூண்டுதலின் பெயரில் அவர்களது பொறுப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். 




மேலும் சமூக வலைத்தளங்களில் எனது புகைப்படத்தை தவறுதலாக பயன்படுத்தி என்னை அசிங்க்கப்படுத்தி வருகின்றனர். எனவே, வீர முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் K.K.செல்வக்குமார் மற்றும் அவர்களது பொறுப்பாளர்கள் என்னைப்பற்றி அவதூறு பரப்பிய அனைத்து நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என சத்தியா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments