BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி தேசியக்கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை

திருச்சி தேசியக்கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை

 தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம், சென்னை மற்றும் திருச்சி தேசியக்கல்லூரியும் இணைந்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இந்த பயிற்சி பட்டறை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் இந்த (ஜூலை) மாதத்திலும், அடுத்த இரண்டு நாட்கள் ஆகஸ்டு மாதத்திலும் நடைபெற உள்ளன.


முதல் கட்ட இந்த பயிற்சி பட்டறையின் தொடக்க விழா இன்று (25-ந்தேதி, திங்கட்கிழமை) காலை கல்லூரி நூலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர். சினிவாசராகவன் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்....

அப்போது அவர் பேசுகையில், திருச்சி தேசியக் கல்லூரி மிகவும் பழைமையும், பெருமையும் வாய்ந்தது. சிறந்த அறிவியல் ஆய்வகம் மற்றும் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறித்தினார்.

பயிற்சி பட்டறை நிகழ்ச்சிக்கு தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 50 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், மண்ணியல், மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சிகள் கொடுக்க உள்ளனர்.

இந்த பயிற்சி பட்டறையின் ஒருங்கினைப்பாளர், தாவரவியல் துறையின் தலைமை மற்றும் துணைமுதல்வர் முனைவர் ஏ.நந்தகோபாலன், வரவேற்புரையாற்றினார். பயிற்சி பட்டறையில் திறமையான பேராசிரியர்கள் பங்கியேற்று பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த பயிற்சியானது நிச்சயமாக பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments