BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ஈரோடு -திருச்சி இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

ஈரோடு -திருச்சி இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு - திருச்சி இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டதுகொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கிய நிலையில் திருச்சி ஈரோடு இடையே நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் ஆக இயக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து காலை 8:10 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. திருச்சியில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று இரவு 8 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது. மற்றொரு ரயில் சேவையாக திருச்சியிலிருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 11: 10 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது. அதேபோல் ஈரோட்டில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்பட்டு இரவு 8"45 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.

Post a Comment

0 Comments