NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார்

திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ,மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தி இடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது


மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் இதுவரை மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. 



இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 ஆயிரம் கன அடி நீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments