// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வாழ்வூதிய மாநாட்டில் வலியுறுத்தல்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வாழ்வூதிய மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் கோரும் வாழ்வூதிய மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்டச் செயலாளர் மதி வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். விளக்க உரையை பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். 


இந்த மாநாட்டின் கோரிக்கைகளாக  2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின் படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கப்படும் எனவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் அரசு துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்திடுவோம் என்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை காவலர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் காலம் முறை ஊதியம் வழங்கிடுவோம் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்திருந்தது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் 


அதேபோல் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூபாய் 15 ஆயிரத்து 700 வழங்க கோரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து பண பலன்களும் ஊராட்சி செயலாளருக்கு வழங்கிட கோரியும் என் ஹச் எம் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் காசநோய் பிரிவு ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊர் புற நூல்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்கிட கோரியும் தர மதிப்பீடு செய்யும் அப்ரசைல் முறையை கைவிடக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்த மாநாட்டில் முன்னாள் மாநில தலைவர்கள் கங்காதரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் இறுதியாக மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments