NEWS UPDATE *** நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ///////\\\\\\\ பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன் *** திருச்சியில் பறவைகள் பூங்காவை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சியில் பறவைகள் பூங்காவை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 இந்தியாவின் மிகப்பெரிய பறவை பூங்கா-கம்-அவேரியல்  (பறவைக்கூடம்) கொண்ட  பறவைகள் பூங்காவை திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துவக்கி வைத்தார் ...


18.63 கோடியில் 4.02 சுமாா் ஏக்கரில் ( 60 ஆயிரம் சதுர அடி) 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் கட்டுமான பணி தொடங்கியது 



தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில் பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாடுக்காக இன்று திறந்து வைத்தார், தொடர்ந்து பூங்காவில் உள்ள பறவைகளை பார்வையிட்டு உணவு அளித்தார், மேலும் பறவைகளைக் கையில் பிடித்தவாறு செல்பி எடுத்துக் கொண்டார் 



இன்று முதல் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பறவை பூங்கா-கம்-அவேரியல் அமைந்துள்ளது 


இந்த பறவைகள் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் அனைத்தும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கு என்று தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பூங்காவில் புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா 50க்கும் மேற்பட்ட வகைகள் குறிப்பாக நெருப்புக்கோழி, ஈமு கோழி, முயல் வகை, புறா, நாட்டுக்கோழி வகைகள், வாத்து, கரட்டான் வகைகள், பாம்புகள், லவ் பேர்ட்ஸ், இதேபோன்று வீட்டு,காட்டு விலங்கு மற்றும் பறவை வகைகள் இங்கு பொதுமக்களுக்கு காட்சி அமைக்கப்பட்டுள்ளது 

இதில் குறிப்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய அளவில்  கடிகாரம் என்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.குறிஞ்சி (மலைகள்),முல்லை (காடுகள்)மருதம் (வயல்கள்),நெய்தல் (கடற்கரைகள்),பாலை (பாலைவனங்கள்) ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக புல்வெளிகள், சிற்பங்கள். நீரூற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைப்படங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா அமைந்துள்ளது


மேலும் முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7D திரையரங்கு, அமைக்கப்பட்டுள்ளது.பெரியவர்களுக்கு 200 ரூபாயும் சிறியவர்களுக்கு 150 ரூபாயும் குழந்தைகளுக்கு இலவசம் கட்டணம் பெறபடுகின்றது.



இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் தொடர்ந்து செய்தியாளரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்...


திருச்சியில் நமக்கு நாமே திட்டத்தில் 18.63 கோடிரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பறவைகள் பூங்காவுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.பறவைகள் பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பொழுது போக்குவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வகையான வெளிநாட்டு பறவைகளுடன் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்று உள்ளன.50 பேர் அமர்ந்து காணொளி காட்சியை ரசிக்கும் படி திறந்த வெளி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை திருச்சி மக்கள் மட்டும் இன்றி வெளி மாவட்ட மாநில மக்களும் பார்த்து ரசிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments