NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

 திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி - திருச்சி சிறப்பு ரயில் (06888) முறையே ஜூலை 18 மற்றும் ஜூலை 19 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


ற்போது பயணிகளின் வசதிக்காக, இந்த ரயில்களை முன்கூட்டியே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் முறையே, ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆம் தேதி முதல் இயக்கப்படும். திருச்சி - காரைக்குடி ரயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி - திருச்சி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படமாட்டாது என, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments