// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத்தேர்தலை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்க வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி...

எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத்தேர்தலை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்க வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி...

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...

எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும்  நான் அவருடன் பயணித்துள்ளேன். கட்சி தலைவர்களை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் எம்ஜிஆர். அந்த வகையில் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்கட்டும்.



ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.



அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர். இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள்தான் என்று கூறினார்.

Post a Comment

0 Comments