// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி

நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி

 திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை வகித்தார். திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் புதுப்பித்த அட்டைகளை நூலகர் புகழேந்தி வழங்கினார்.


 ‘‘படிப்பதால் கல்வித் தரம் உயரும். வாசிப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும்” என்பதை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments