// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மின் கட்டண உயர்வை கண்டித்து SDPI கட்சி நூதன போராட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து SDPI கட்சி நூதன போராட்டம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சிமினி விளக்கு மெழுகுவர்த்தி எந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக  அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சிமினி விளக்கேற்றி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


தெற்கு மாவட்ட செயலாளர் மதர்  ஜமால் முகமது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி,  பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா மற்றும் விம் திருச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் ஆகியோர்கள் திமுக அரசின் மக்கள் விரோத மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்




மேலும் திமுக அரசை கண்டித்து திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி மற்றும் ஊடக அணி மண்டல பொறுப்பாளர்  ரியாஸ்  ஆகியோர்கள் கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.





இந்த நிகழ்வினை தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் SDTU மாநில செயலாளர் முஹம்மது ரபீக், வர்த்தகர் அணி மண்டல தலைவர் சாதிக் பாட்சா,திருச்சி தெற்கு மாவட்ட,தொகுதி,அணி,கிளை நிர்வாகிகள்,பொது மக்கள் என திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

இறுதியாக மேற்கு தொகுதி தலைவர்  அப்பாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments