மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி முதன்மை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி எம்.முஹமது ஷரிப் தலைமையில் சென்னை ராயப்பேட்டை, ஜோஹரா மஹாலில் நடைபெற்றது.
(1) கள விரிவாக்கம் :
தமிழகம் முழுவதும் இளைஞர் அணி நிர்வாகத்தை விரிவுப்படுத்தி, கட்டமைப்பை வலுப்படுத்துவது. அதற்காக மண்டல வாரியாக சுற்று பயணங்களை திட்டமிடுவது.
(2) உச்ச நீதிமன்ற தடை சரியல்ல
உயர்கல்வி நிலைய செயல்பாடுகள் குறித்து பல்கலைக்கழக மானிய குழுவின் (U.G.C) சமத்துவ வழிகாட்டுதலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனித நேயத்துக்கும், சமூக நீதித்துக்கும் எதிரானது என இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
U.G.C. யின் புதிய திருத்தம் - 2026 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
(3) கலாம் பிறந்தநாளில் நிகழ்ச்சிகள் :
இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம் அவர்களின் - அக்டோபர் 15 -பிறந்த தினத்தை 'இளைஞர்கள் எழுச்சி நாளாக' இளைஞர் அணி சார்பில் கொண்டாடுவது.
(4) ஆர் டி ஐ திரும்பப் பெறக் கூடாது :
தகவல் பெறும் உரிமை சட்டமான (RTI) சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை குழு பரிந்துரையை நிராகரித்து, RTI சட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(5) மஜக இளைஞர் அணி - 2026 ஓராண்டுக்கான செயல்திட்டம் :-
திறன் வளர்ப்பு வகுப்புகள், அரசியல் பயிலரங்கங்கள், மாநிலம் தழுவிய பேச்சு - கட்டுரை - கவிதை போட்டிகள் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆகியவற்றை மாவட்ட வாரியாக நடத்துவது.
( 6 )செயற்குழு :
இளைஞர் அணியின் மாநில செயற்குழுவை திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக இளைஞர் அணி மாநில பொருளாளர் பெரம்பலூர் இம்ரான் நன்றி உரை கூறி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.














0 Comments