// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய வரலாற்று ஆர்வலர்கள்

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய வரலாற்று ஆர்வலர்கள்

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் ஆளுநர் விருதினை வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமாரை திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தினர் பாராட்டினர்.

சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், லட்சுமி நாராயணன், கிருஷ்ணகிரி மதன், பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, பன்னாட்டு பணத்தாள்கள் சேகரிப்பாளர் அப்துல் அஜீஸ், திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், கரூர் சந்துரு, சேலம் பூபதி, சென்னை சின்னப்பா பூபதி, சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், தஞ்சை மீரான், முகமது யூசுப்,பைசல், அப்துல் ரஹீம், துறையூர் பெரியசாமி, திருப்பத்தூர் மகேஷ், அபிஷேக், ராஜேஷ் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments