BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா 6 ஆம் தேதி நடைபெற உள்ளது-இயக்குனர் அகிலா தகவல்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா 6 ஆம் தேதி நடைபெற உள்ளது-இயக்குனர் அகிலா தகவல்

திருச்சி என்.ஐ.டி இயக்குனர் அகிலா, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...

திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6-ஆம் தேதி  நடைபெற உள்ளது.


பி.ஆா்க்., பி.டெக்., எம்.ஆா்க்., எம்.டெக்., எம்எஸ்சி, எம்சிஏ, எம்பிஏ, எம்ஏ, எம்எஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1,977 மாணவா், மாணவிகள் பட்டம் பெறுகின்றனா். 131 பேருக்கு முனைவா் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.


திருச்சி என்ஐடி வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கையில் பட்டம் பெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. பிடெக் பிரிவில் மாணவா் கிமாயா பிரசாத் சூரிராவுக்கு குடியரசுத் தலைவா் பதக்கம் வழங்கப்படவுள்ளது. இவைத்தவிர, 42 மாணவா், மாணவிகள் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை பெறுகின்றனா். கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மெய்நிகா் வழியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா இந்த முறை நேரடியாக நடைபெறுகிறது. பெடரல் வங்கியின் தலைமை நிா்வாக அலுவலா் ஷ்யாம் சீனிவாசன் பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments