// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** கோவை 31 வது வார்டு அவலநிலை

கோவை 31 வது வார்டு அவலநிலை

 கோவை மாவட்டம் 31 வது வார்டு ஜெயபிரகாஷ் நகர் கணபதியில் தொழில் கூடங்கள் அதிகம் உள்ள பகுதி..



 வாகனங்கள் போக்குவரத்திற்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறாக பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகளும் காய்கறி கழிவுகளும் அதிகம் இந்த ஒரே பகுதியில் கொட்டப்படுகிறது..



 இதனால் அப்பகுதியில் மிகுந்த  துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் வாகனங்களிலும் நடந்தும் செல்லும் மக்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. ஒரு வார  காலமாகியும் இந்த குப்பைகள் மாநகராட்சி நிர்வாகத்தினால் தூர்வாரப்படுவதில்லை..



 மேலும் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் மக்கா குப்பைகளும் இங்கே வந்து கொட்டப்படுகிறது சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அருகில் உள்ள மக்கள் கோரிக்கை மேலும் இப்பகுதியில் வாரம் இருமுறை குப்பைகளை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை 

கோவை நிருபர் கோபிநாத் 





Post a Comment

0 Comments