// NEWS UPDATE *** ”இந்த கூட்டணிய நல்லபடியா நடத்தணும்... சிறு,சிறு பூசல்களை தவிர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும்” - நிர்மலா சீதாராமன் ***** விரைவில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் த.வெ.க தலைவர் விஜய்.! *** முசிறி அருகே கள்ளச்சாராயம் 50 லிட்டர் ஊரல் மற்றும் சாராயம் அழிப்பு - காய்ச்சியவர் கைது.

முசிறி அருகே கள்ளச்சாராயம் 50 லிட்டர் ஊரல் மற்றும் சாராயம் அழிப்பு - காய்ச்சியவர் கைது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த சோளம்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக முசிறி மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் டிஎஸ்பி முத்தரசு தலைமையில்  எஸ்எஸ்ஐ சுரேஷ் மற்றும் தலைமைகாவலர் லோகநாதன், முது நிலைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது, சோளம் பட்டி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கண்ணன்( 45) கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கும் போது பிடிபட்டார்.


அவரிடம் இருந்து ஐந்து லிட்டர் சாராயம் மற்றும் 50 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கண்ணனை கைது செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Post a Comment

0 Comments