BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** "அர சுருட்டு" குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீடு

"அர சுருட்டு" குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீடு

 திருச்சி குறும்பட குழுவினரால் எடுக்க பட்டு பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்ற "அர சுருட்டு"  குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள தமிழ் சினிமா கம்பெனி அலுவலகத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது ...


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  தமிழ் சினிமா கம்பெனியின் நிர்வாகியும் திரைப்பட இயக்குனருமான திரு. எம்.கஸாலி அவர்கள் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் வசனகர்த்தாவான கலைமாமணி டாக்டர். லியாகத் அலிகான் அவர்கள் மன்மதன் திரைபடத்தின் இயக்குநர் திரு.  ஏ.ஜே.முருகன் அவர்கள்  பிரபல திரைப்பட நடிகரும் இயக்குருமான காதல் சுகுமார் அவர்கள் பாடலாசிரியரும் திரைப்பட இயக்குனருமான திரு. முருகன் மந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அர சுருட்டு படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்தனர்  வெளியீட்டிற்கு பிறகு அர சுருட்டு படத்தை பற்றி பேசிய சிறப்பு விருந்தினர்கள்..



"அர சுருட்டு" என்ற குறும் படத்தைத் திருச்சியைச் சேர்ந்த படகுழுவினர் திருச்சி மாவட்டதிலேயே படத்தின் ஷூட்டிங் எடிட்டிங், டப்பிங், இசை  VFX,SFX  உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் அனைத்தையும் செய்து முடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குறியது சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் என்றால் சென்னையில் தான் தொழில் நுட்ப பணிகளையும் செய்ய முடியும் என்கிற நிலையை திருச்சி படகுழுவினர் மாற்றியுள்ளனர்


தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை திருச்சி மாவட்டத்தில் உள்ள வசதிகளை வைத்து மிக சிறப்பாக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்


திருச்சி மாவட்டத்தை சேர்ந்த படகுழுவினர்  நல்ல தரமானதாக, நல்ல சஸ்பென்சுடன் சிறப்பாகவும் மிகவும் நேர்த்தியாகவும் எடுத்துள்ளனர்  அர சுருட்டு படத்தை படகுழுவினர் பல்வேறு குறும்பட போட்டிகளுக்கு அனுப்பியுள்ளனர் படகுழுவினர்  அர சுருட்டு படம் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது பாராட்டுக்குறியது


இந்த டீம் மிக சிறப்பாக அவர் அவருக்கு கொடுக்கபட்ட பணிகளை கதை,இயக்கம்,நடிப்பு, இசை, ஒளிப்பதிவு,  படதொகுப்பு,டிசைன், உள்ளிட்ட) அனைத்து பணிகளையும் மிகி சிறப்பாக செய்துள்ளனர் எதிர்காலத்தில் அர சுருட்டு டீம் முழுநீளத் திரைப்படம்  எடுக்கும்போது தமிழ் சினிமா கம்பெனி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து முக்கிய பங்காற்றும் என்று கூறினார் மேலும் தமிழ் சினிமா கம்பெனி பல திறமையான இளைஞர்களுக்கு புதிய  வாய்ப்புகளை வழங்கும் இயக்கம் ஒளிப்பதிவு படதொகுப்பு  குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை எப்படி  எடுக்கலாம் என்பது போன்று திரைப்பட துறையில் சாதிக்க விரும்பும் நபர்களுக்கு முறையான ஆலோசனையும் உதவிகளையும் வழங்கும் என்று கூறினர்  முன்னதாக நிகழ்விற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அர சுருட்டு படகுழுவினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அர சுருட்டு படகுழுவினரகள் இயக்குனர்  விஜய் பார்த்திபன் சமூக ஆர்வலரும் நடிகருமான திருச்சி ஆர்.ஏ.தாமஸ்  படத்தொகுப்பாளரும் குறும்பட இயக்குனருமான திரு. குமார் தங்கவேல் ஒளிபதிவாளரும் நடிகருமான யாசின் வழக்கறிஞரும் இயக்குனருமான  ரமேஷ்  மந்தமாருதம் திரைப்பட இயக்குனர் இளமாறன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் இந்நிகழ்வில் உதவி இயக்குனர் நிர்மல் குமார் உதவி இயக்குனர் பாண்டி திரு.மதன், க.கவிஅரசி, ஆர்.சுபிக்ஷா ஜார்ஜ், தனபால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வருகின்றன ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தில் சமூக வலைதளத்தில் அர சுருட்டு படம் வெளியாகவுள்ளது என்று படகுழுவினர் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments