// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** இடியும் நிலையில் அங்கன்வாடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்கள்

இடியும் நிலையில் அங்கன்வாடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்கள்

 திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் இடியும் நிலையில் உள்ளது.. 


இதனை  சுட்டிக்காட்டி புகைப்பட ஆதாரங்களுடன் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.. இது சம்பந்தமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பிடிஓ அவர்களிடம் மூன்று முறை விண்ணப்பம் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டிடம் இடிந்து விழுந்து விபரீதம் ஏற்படும் என்பதையும் அவ்விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது...



அப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் 20க்கும் மேற்பட்டோர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி ராபியத்துல் பசரியா அவர்களின் தலைமையில் மேற்படி கோரிக்கையை ஆட்சித் தலைவரிடம் நேரில் அளித்தனர்

Post a Comment

0 Comments