BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** தேசியக் கல்லூரியில் கண்ணனைத் தேடி என்ற வரலாறு சார்ந்த பண்பாட்டு நிகழ்வு

தேசியக் கல்லூரியில் கண்ணனைத் தேடி என்ற வரலாறு சார்ந்த பண்பாட்டு நிகழ்வு

திருச்சி தேசியக் கல்லூரியில் கண்ணனைத் தேடி என்ற வரலாறு சார்ந்த பண்பாட்டு நிகழ்வு நடைபெற்றது . இந்த இனிய விழாவிற்குக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி வரவேற்புரை வழங்கினார் . 


கல்லூரி முதல்வர் முனைவர் குமார் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரை நல்கினார். தொல்லியல் மற்றும் வரலாற்றுக் கண்காட்சியை டி .கே .வி ராஜன் தொகுத்து வழங்கினார். இன்றைய இளம் தலைமுறையினர் எந்த நிகழ்வாக இருந்தாலும் ஆதாரங்களைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இதன் அடிப்படையில் கண்ணன் குறித்த சான்றுகளையும் மகாபாரதம் நடந்ததற்கான ஆதாரங்களையும் வரலாற்று நோக்கில் விளக்கும் வண்ணம் இந்நிகழ்வு நடைபெற்றது. துவாரகை ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, அஸ்தினாபுரம் காம்பே வளைகுடா அகழ்வாராய்ச்சி, ஆப்கானிஸ்தானில் கிடைத்த கண்ணன் பலராமன் காசுகள், 2000 வருடங்களுக்கு முன் கிருஷ்ண பக்தர்களாகிய கிரேக்க ரோமானியர்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 4000 ஆண்டுகள் பழமையான ரதங்கள் போன்றவை வரலாற்றுக் காட்சிகளாக இந்த நிகழ்வில் விளக்கப்பட்டன. அய்யம்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் செயலர் முரளி கிருஷ்ணன் இந்த இனிய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்ணன் குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை மாணவ மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார்



இளம் தலைமுறையினர் கண்ணனைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த விழாவில் காவேரி குளோபல் பள்ளியின் முதல்வர் சரஸ்வதி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சஹானா மற்றும் கீதாஞ்சலி மருத்துவமனையின் இயக்குனர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், ஊடகவியலாளர்கள், பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றும் கண்காட்சியைக் கண்டும் சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments