BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – மக்கள் அதிகாரம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – மக்கள் அதிகாரம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

 மக்கள் அதிகாரத்தின் சார்பில் திருச்சி உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். மேலும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சமீபத்தில் இந்த டாஸ்மாக் கடைகளால் பட்டப் பகலில் கொலையும் நடந்துள்ளது. ஆகவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது..




இந்த இரு மனுக்களின் நகல்களை திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் கொடுக்கப்பட்டு அதன் நிலைமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட துணை ஆணையர் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்



இந்நிகழ்விற்குமக்கள் அதிகாரம் மாநிலத் துணைச் செயலாளர் லே-செழியன் தலைமை ஏற்றார்.மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, கலைக்குழு செயலாளர் லதா / விடுதலை சிறுத்தைகள் சார்பில் தில்லை முரசு / மக்கள் உரிமை கூட்டணி சார்பில் காசிம் /மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் காஜா முஹம்மது/ ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்குமார் /ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாலு/ செல்வராஜ்ஆகியோர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments