BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணி

ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி - கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு. 


திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இரண்டு நாள் உணவு திருவிழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. 


இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்


1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற வாக்கத்தான் பேரணியை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஐயப்பன் கோவில் சாலை, அரசு மருத்துவமனை சாலை, புத்தூர் நால்ரோடு வழியாக பிஸப் ஹீபர் கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது

நாளை( ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு மாவட்ட பிஸப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் உணவு திருவிழா தொடங்க உள்ளது. இதனை கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைக்கிறார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி, குறும்படம் போட்டி, பட்டிமன்றம் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவில் சுமார் 75 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் உணவு பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு அரங்குகளும் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு அரங்குகளும், பாரம்பரிய உணவு வகைகளும், தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்து அந்தந்த மாவட்டங்களுடைய பிரபல உணவு வகைகளும் காட்சிப்படுத்தியும் குறைந்த விலையில் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments