BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ஜி.கே மூப்பனார் பிறந்தநாள் விழா - த.மா.கவினர் கொண்டாட்டம்

ஜி.கே மூப்பனார் பிறந்தநாள் விழா - த.மா.கவினர் கொண்டாட்டம்

த.மா.கா. நிறுவன தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் நேரு பவன் திடலில் த.மா.கா. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜி.கே.வாசன் தலைமையில் மூப்பனாரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.




அந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட த.மா.கா. விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் தலைமையில், திருச்சியை அடுத்த புங்கனூரில் உள்ள காமராஜர் மன்றத்தில் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மன்றம் முன்பு த.மா.கா கொடியேற்றி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.




விழாவில், மாநில விவசாய அணி பொருளாளர் ராஜேந்திரன், புங்கனூர் மன்ற தலைவர்கள் அழகப்பன், அருள், கணேசன், சிதம்பரம், ராமசாமி, பால்ராஜ் கவுண்டர், செந்தில், கண்ணன், சண்முகம், வேலுச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்





தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 91-வது பிறந்த நாளினை விவசாய தினமாக கொண்டாடி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மூப்பனாரின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, இயக்கத்தின் கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன




இந்நிகழ்ச்சிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் என்.ரவி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி. ரவீந்திரன் திருச்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா மாநிலச் செயலாளர் ஸ்ரீரங்கம் எஸ் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்




இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, தெற்கு மாவட்ட துணை தலைவர் சமுத்திரம் கணேசன் வடக்கு மாவட்ட துணை தலைவர் மருதநாயகம், மாவட்ட செயலாளர்கள் என்.சரவணன் ரவிச்சந்திரன், சிவசக்தி வெங்கடேசன், மண்ணச்சநல்லூர் நகர தலைவர் சிவராமன், மகளிர் அணி தலைவி அன்னபூரணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் உசேன், பாலக்கரை கோட்டத் தலைவர் கண்ணன்,

பாலக்கரை கோட்டம் துணை தலைவர் ஹரி, செந்தண்ணீர்புரம் சுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன், அன்னபூரணி, மனோகர், செல்வம் பட்டையதார், இளைஞரணி மாநில துணை தலைவர் கமல், செளக் அனிஷ், தாராநல்லூர் வடிவேலு, சிந்தாமணி பாண்டியராஜன், மரக்கடை காசிம், முருகேசன், தாராநல்லூர் வடிவேலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் சதீஷ், உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தனசேகர் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments