NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மத்திய அரசின் சர்வாதிகார போக்கு இந்தியாவுக்கு ஆபத்து - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி

மத்திய அரசின் சர்வாதிகார போக்கு இந்தியாவுக்கு ஆபத்து - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் சுலைமான், பொது செயலாளர் அப்துல் கரீம், மாநில துணை தலைவர் பாரூக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




கூட்டத்திற்கிடையே மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...




மத்திய பாஜக அரசு அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகார போக்கை கையில் எடுத்துள்ளது. இதன் விளைவுகளை இந்த பொதுக் கூட்டத்தின் வாயிலாக பொது மக்களிடம் எடுத்து கூறியுள்ளோம்







மக்களின் எழுத்துரிமை, பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை பாஜக அரசு நசுக்கி வருகிறது. எதிர்த்து கேள்வி கேட்பவர்களை UAPA சட்டத்தின் மூலம் சிறையில் தள்ளுகிறார்கள். குஜராத் கலவர வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். சர்வாதிகார போக்கை தொடர்ந்து கையிலெடுத்து வந்தால் அண்டை நாடான இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் இந்திய நாட்டிற்கும் ஏற்படும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments