NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** சினிமாவிலிருந்து இருந்து விலகும் நடிகை நயன்தாரா - ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவிலிருந்து இருந்து விலகும் நடிகை நயன்தாரா - ரசிகர்கள் அதிர்ச்சி

லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்..இதையடுத்து இருவரும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.




திரைத்துறையில் இருந்து விலகல் திருமணம் முடிந்த நிலையில் முதல் முறையாக இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது இருக்கும் படங்களை நடித்து கொடுத்துவிட்டு திரையுலகில் இருந்து விலக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




இதற்கு காரணம் தாலி சென்டிமென்ட் என்று கூறப்படுகிறது. நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்திற்காகவும் தாலியை கழட்ட வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களில் கூட தாலியை கழட்டாமல் நடித்து வருகிறார்.




பல கதாபாத்திரங்களில் நடிக்கும் போது தாலியை கழட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினாலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிப்பார் எனவும் இதையடுத்து புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.   

Post a Comment

0 Comments