// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி இரட்டைவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதல்நாள் போட்டியாக  கூடைப்பந்தாட்டப் போட்டியும், கேரம் விளையாட்டுப் போட்டியும்  இன்று காலை இனிதே துவங்கியது. 


கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 அணிகளும்,கேரம் விளையாட்டுப் போட்டியில் 180 மாணவர்களும் கலந்து கொண்டனர்.  



மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தீபன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்   . டாக்டர். குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவ,மாணவர்களுக்குப் பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.



 பள்ளி முதல்வர் திருமதி. உஷா ராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கி கெளரவித்தாா்.உடற்கல்வி ஆசிரியர் திரு. முருகபூபதி அவர்கள் நன்றியுரை வழங்கினாா்.


விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக நாளை சதுரங்கப்போட்டி பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது.


கண்டோன்மென்ட் ஆர்.சி பள்ளியில் ZONAL-B குறுவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு கேரம் போட்டி நடைபெற்றது..இதில் மாணவர்கள் 50 பேரும் மாணவிகள் 30 பேரும் கலந்து கொண்டனர்...

இப்போட்டியை  உடல் கல்வி ஆசிரியர் ஜான் சபரிராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார்..


நிருபர் JS மகேஷ்

Post a Comment

0 Comments