// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சி செந்தண்ணீர்புரத்தில் ஆடித்திருவிழா

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் ஆடித்திருவிழா

திருச்சி செந்தண்ணீர்புரம் கோவலன் தெருவில் வாழ வைக்கும் வண்டித்துறை கருப்பசாமி கோவில் 16 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது...


07 ஆம் தேதி நேற்று கஞ்சி வார்த்தல், காப்பு கட்டுதல், பூச்செரிதல் விழா தப்பு , கொம்பு  வானவேடிக்கையுடன்  வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது... வருகிற 12 ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம்  காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை  மாலை 5 மணிக்கு குத்து விளக்கு பூஜையும் நடைபெறுகிறது... 




13 ஆம் தேதி சனிக்கிழமை காஜாபேட்டையிலிருந்து தீர்த்தகுடம், பால் குடம் , முளைப்பாரி , அக்னி சட்டி  எடுத்து வாணவேடிக்கையுடன் நகர் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது...13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜை மற்றும். இரவு கிடா வெட்டு பூஜை நடைபெறுகிறது. 14 ஆம் தேதி அடசல் பூஜையும் அதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது..



இந்த திருவிழாவில் வேண்டுதல்  நிறைவேற்றுவதால் பக்தர்கள் ஆடு மற்றும் காணிக்கைகளை செலுத்தி திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்


நிருநர் J.S மகேஷ் 





Post a Comment

0 Comments