// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** போதை விழிப்புணர்வு மினி மாரத்தான்

போதை விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் விதமாக திருச்சி அம்ரிதா வித்யாலயம் பள்ளியின் சார்பாக மினி மாரத்தான் போட்டி இன்று காலை அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பள்ளி வளாகம் வரை (4km) நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியை காவல்துறை கூடுதல் ஆணையர் (DC) உயர்திரு. V.அன்பு அவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டியை துவக்கிவைத்தார். 



பள்ளி முதல்வர் வரவேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார் இப்போட்டியில் சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற முதல் 20மாணவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனை காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜோதி அவர்கள் பரிசுகளையும், சான்றிதழ்கள் வழங்கினார்.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments