BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் அதிநவீன முறையில் கருடா ஸ்கேன் மையம் திறப்பு விழா

திருச்சியில் அதிநவீன முறையில் கருடா ஸ்கேன் மையம் திறப்பு விழா

 திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள  சந்தானம் டவரில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதிநவீன முறையிலான  கருடா ஸ்கேன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கருடா ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்க, இன்ஜினியர் கலியபெருமாள், சேது லட்சுமி கலியபெருமாள், தனவீரசேகரன்,  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ராஜேஷ்குமார், மகப்பேறு மருத்துவர் டாக்டர் கே.புவனேஸ்வரி லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



 இதில் ஏராளமான முக்கிய நிர்வாகிகள் டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கருடா ஸ்கேன் சென்டரில் அனைத்து நவீன ஸ்கேன் வசதிகள், எம் ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, கலர் டாப்லர் ஆகிய வசதிகள் ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டுள்ளது. 



எம்ஆர்ஐ ஸ்கேன் பற்றி அனைவரும் அறிந்தது தான். இங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் -ன் சிறப்பு அம்சங்கள், 20 நிமிடத்தில் ஸ்கேன் எடுத்துவிடலாம். சப்தம் குறைவாக இருக்கும். 24 மணி நேரமும் இயங்கும். அவசர ஊர்தி வசதி உள்ளது. உடனுக்குடன் ரிப்போர்ட் செய்ய மருத்துவர்கள் குழு உள்ளது. படங்கள் துல்லியமாக, தெள்ளத் தெளிவாக இருக்கும். இங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேன்ல் நரம்பியல் சம்பந்தமான புதிய தொழில்நுட்பம் உள்ளதால் அனைத்து வியாதிகளையும் விரைவில் கண்டறிய முடியும். உதாரணமாக ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால் அவரை கை, கால்களை ஆட்டச் சொல்லியும், பேச சொல்லியும், ஸ்கேன் எடுக்கலாம் இதனால் அறுவை சிகிச்சை  மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக சிகிச்சை செய்ய முடியும். மூளையில் எந்த பகுதியில் ரத்த அடைப்போ, கசிவோ ஏற்பட்டால் 15 நிமிடத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவாக குணமடைய முடியும். தலைக்காயம் ஏற்பட்டு மூளை திரவ கசிவு ஏற்பட்டால் அதை துல்லியமாக கண்டறிவதன் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெற்றிகரமாக செயல்பட முடியும். மூளை பகுதியில் டிபி நோய் ஏற்பட்டால் அதற்கு ஸ்பெக்ட்ரோஸ்கோபி முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து எளிதாக கண்டறியலாம் என்ற நவீன பயன்பாடுகள் உள்ளன. எம் ஆர்ஐ ஸ்கேன் ரேடியேஷன் இல்லாத பாதுகாப்பான இயந்திரம் ஆகும். கருடா ஸ்கேனில் ரத்த பரிசோதனைகள், உடல் உறுப்பு முழு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படும். ஸ்கேனில் 12 வருடங்கள் அனுபவம் பெற்ற நாங்கள், நோயாளிகளின் தேர்வு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம். சிடி ஸ்கேன் மூலம் வயிற்றுப் பகுதி மற்றும் உடல் பகுதியில் கட்டிகள் இருந்தால் திசு பரிசோதனை செய்யலாம். ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கசிவுகள் உடலின் எந்த பகுதியில் ஏற்பட்டாலும் கண்டறியலாம். மற்ற மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு அழைத்து வர இலவச அவசர ஊத்தி வசதி 24 மணி நேரமும் உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் ஸ்கேன் செய்யப்படும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments