// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி

பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி

 இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமை தாங்கினார். 


கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வரவேற்றார். இளைஞரணி மாவட்ட தலைவர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பாஜ.க.வினர் விண்ணில் மூவர்ணத்திலான பலூன்களை பறக்க விட்டு கைகளில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகம், மிளகு பாறை, ஜங்ஷன் தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் வழியாக சத்திரம் நிலையத்தை சென்றடைந்தது.

பேரணியில் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ஸ்ரீராம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments