// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம் - எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்பு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம் - எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்பு

 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி, மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவர் மதிவாணன், மண்டலம் 2-ன் தலைவர் ஜெயநிர்மலா, வேளாண்மை துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

எனவே காவிரி பாலத்தில் இருந்து அண்ணா சிலை, தலைமை தபால் நிலையம மேல்மட்ட சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட் நெருக்கடி, குடிநீர் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments