// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** இட ஒதுக்கீடு குறித்து SDPI சார்பில் கலந்துரையாடல்

இட ஒதுக்கீடு குறித்து SDPI சார்பில் கலந்துரையாடல்

 முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு குறித்து SDPI கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு குறித்து நீண்ட கலந்துரையாடல் நிகழ்வு,சென்னையில் SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


தற்போது வழங்கப்பட்டு இருக்கும் 3.5% முஸ்லிம் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை 5% சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து SDPI கட்சி போராடிக் கொண்டிருக்கும் காலச் சூழலில், SDPI கட்சி ஒருங்கிணைத்த இட ஒதுக்கீடு குறித்த இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில், 



மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி துணை பொதுச் செயலாளர் வாலாஜா வல்லவன், Empower India Foundation இன்ஜினியர் முஹம்மது,பேராசிரியர் சபூர்,வழக்கறிஞர்.சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு இட ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன் வைத்து உரை ஆற்றினார்கள்.

Post a Comment

0 Comments