// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** SDPI கட்சி தலைமைத்துவ பயிற்சி முகாம்

SDPI கட்சி தலைமைத்துவ பயிற்சி முகாம்

 SDPI கட்சியின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கான (SLT) இரண்டாம் தலைமைத்துவ பயிற்சி முகாம் 20,21 ஆகிய தினங்களில் திருச்சியில் நடைபெற்றது.  


மண்டல தலைவர் இமாம் R.ஹஸ்ஸான் ஃபைஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் முகாமில் SDPI கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக்,



மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது,மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நஸ்ருதீன்,மாநில செயலாளர் ஏ.கே.கரீம்,மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர்.ராஜா முஹம்மது



பூவுலகின் நண்பர்கள் பிரபாகரன்,DET மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை கனி ஆகியோர் கலந்து கொண்டு சமூக பொறியியல்,தேர்தல் மேலாண்மை,அரசியல் அணி திரட்டல்,பருவ நிலை மாற்றம்,கொள்கை ஒழுங்கு முறை,தலைவர்கள் நெறிமுறைகள்,மாண்புகள் ஆகிய தலைப்புகளில் வகுப்புகளை எடுத்தனர்.

இந்த 2 நாள் முகாமில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments