BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ரயில்வே தனியார் மயமாக்குதல் கண்டித்து SRMU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தனியார் மயமாக்குதல் கண்டித்து SRMU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 ரயில்வே துறையை தனியாருக்கு விற்காமல் அதை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் திருச்சி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்


ரயில்வேயைக் காப்போம்!தேசத்தைக் காப்போம் என்கிற பிரச்சார தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ரயில்வே துறையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு அச்சங்கத்தின் தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்



  பாரத் கௌரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும்,வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை “தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்


பணமாக்கல் என்ற பெயரால்,ரயில் நிலையங்கள்,மின்பாதை அமைப்புகள்,கொங்கன் ரயில்வே,சரக்கு நிலையங்கள்,சரக்குப் பாதை ,உற்பத்தி,பராமரிப்பு பணிமனைகள் உள்ளிட்ட பொது மக்கள் சொத்துக்களை தனியாரிடம் விற்க கூடாது.


   

ரயில்வே தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து ,குறுகிய கால,ஒப்பந்த ஊழியர்களை ரயில்வே துறைக்குள் புகுத்தக் கூடாது,

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப்பொது செயலாளர் வீரசேகரன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



Post a Comment

0 Comments