BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** கர்நாடகாவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 9.40 லட்சம் மோசடி செய்த நபர் மீது காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார்

கர்நாடகாவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 9.40 லட்சம் மோசடி செய்த நபர் மீது காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை பகுதியை சேர்ந்த  சுதாகர் என்பவர் இன்று காவல் துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது...


கடந்த 2019 ஆம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர் என்னிடம் அறிமுகமாகி கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை, ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறையில் ரூ. 23 லட்சம் பணம் கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனையடுத்து விக்னேஷ் என்பவருக்கு காவல் உதவி ஆய்வாளர் பணி, வினோத் என்பவருக்கு ஃபுட் கார்ப்பரேஷன் பணி, சகாயராணி புனிதா என்பவருக்கு அஞ்சலக பணி ஆகிய பணிகளுக்கு முன் பணமாக 9.40 லட்சம் ரூபாயை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் மேற்கூறிய மூன்று நபர்களுக்கும் கர்நாடகா மாநிலத்தில் அரசு வேலை கிடைத்துள்ளதாக குறுந்தகவல் வந்தது


அதனை சோதனை செய்த போது அது போலியான குறுந்தகவல் என தெரிய வந்தது. இது குறித்து அப்துல் ரஷீத்திடம் கேட்ட போது கர்நாடகாவில் உள்ள ஏ.டி.ஜி.பி அம்ரீத் பால் உடன் பேசி உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள ஆட்களுக்கு வேலை வாங்கி தருவதற்கு அம்ரீத் பால் முகவர் எனவும் ஆகையால் பணத்திற்கு உத்தரவாதம் என கூறினார். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் தொடர்ந்து அப்துல் ரஷீத்திடம் பணம் கேட்ட போது,       ரூ. 4.40 லட்சத்தை எனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கர்நாடகா ஏ.டி.ஜி.பி அம்ரீத் பால் கைது செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சி மூலமாக அறிந்த நான், மீதமுள்ள 5 லட்சம் பணத்தை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என அப்துல் ரஷீத்திடம் கேட்ட போது அவர் உரிய காரணங்கள் தெரிவிக்காமல் பேசி மழுப்புவதுடன், நீ கொடுத்த பணத்திற்கு ஆதாரம் இல்லை, பணத்தை கொடுக்க முடியாது என்று மிரட்டி வருகிறார். தொடர்ந்து அவரைப் பற்றி விசாரித்த போது தமிழகத்தில் பல நபர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்கள் மோசடி செய்துள்ள விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதனால் தொடர் மோசடியில் ஈடுபட்டு வரும் அப்துல் ரஷீத் மற்றும் அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments