BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மனிதம் டிரஸ்ட் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா

மனிதம் டிரஸ்ட் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா

ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகி வரக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை தடுக்கும் விதமாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்தியா முழுவதும் செப்டம்பர் முதல் வாரம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. 


இந்த நிலையில் திருச்சியில் இயங்கி வரும் மனிதன் சமூகப் பணி மையம் சார்பாக திருச்சியில் உள்ள மக்களிடம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை  கொண்டு செல்லும் விதமாகவும், பள்ளி மாணவர்களுக்கும் ஊட்டச்சத்தின் தேவை குறித்து புரிய வைக்கவும் திருச்சி தெப்பக்குளம் மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், ஊட்டச்சத்தின் தேவை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஏன் அவசியம் என்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரை, ஓவியம், தனி நடனம், குழு நடனம், மைம், பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்ட  போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்விற்கு மனிதன் சமூக பணி மையத்தின் நிறுவனர் திரு.ஜி.ஆர்.தினேஷ்குமார் தலைமை வகித்தார். மேலாளர் திரு.ஜாகிர் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உரை நிகழ்த்தினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி.நித்யா ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி திருச்சி தெப்பக்குளம் பள்ளியில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் யூத் ஐகான் அவார்ட் வழங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சியைச் சேர்ந்த திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Post a Comment

0 Comments