BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** கழிவு நீர் அகற்றும் பணியாளர்களுக்கு முதலுதவி பெட்டி

கழிவு நீர் அகற்றும் பணியாளர்களுக்கு முதலுதவி பெட்டி

"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ்" (IIHS) நிறுவனத்தினால், திருச்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் "நகர் முழுவதும் உள்ளடக்கிய சுகாதாரம்" (City Wide Inclusive Sanitation) என்கிற திட்டத்தின் மூலம், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் ரெட் கிராஸ் உடன் இணைந்து, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகன பணியாளர்கள் மற்றும் நுண்ணுரம் செயலாக்க மைய பணியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது.


Important  ராதாகிருஷ்ணன் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்றுனர் புத்தாக்க பயிற்சி வழங்கினார். மேலும், தூய்மைப் பணியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய அபாயங்கள்/ஆபத்துகளிலிருந்து அவர்களது உயிரைக் காக்க உதவும் முதலுதவிப் பொருட்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டிகளும் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,  நகர்நல அலுவலர் ஷர்மிலி கலாமணி,  iihs நிறுவன தலைமை வல்லுனர் சுகந்தா பிரிசில்லா,  iihs நிறுவன அணி தலைவர், நீலாதிரி சக்ரபோர்டி,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்




இந்நிகழ்வு அனைத்தையும்    iihs நிறுவன தலைமை வல்லுனர், சுகந்தா பிரிசில்லா, முன்னின்று செயல்படுத்தினார்.

Post a Comment

0 Comments