BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை கூட்டம்

தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை கூட்டம்

  திருச்சி, தேசியக்கல்லூரியில் வணிகவியல் பேரவைக் கூட்டம் கல்லூரி குளிரும் கலையரங்கில் நடைபெற்றது. முன்னதாக இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி கட்சிகாரங்க வரவேற்றார். முனைவர் ஆர். சுந்தரராமன் தலைமைத் தாங்கினார்.

 முன்னாள் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர். ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "காளைகள் மற்றும் கரடிகளின் அதிசய பூமி" என்ற தலைப்பில் பேசினார். பங்குச் சந்தை என்பது அறிவார்ந்த முதலீட்டாளர்களுக்குச் செல்வத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைக்  கொண்ட ஒரு பரந்த அரங்காகும் என்றார்.  இந்தியப் பங்குச் சந்தையானது உலகின் திறமையான அமைப்புகளில் ஒன்றாக பரிணமித்துள்ளது என்றும், மனதைக் கவரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும், அதன் சராசரி தினசரி வருவாய் ரூ. 50,000 கோடியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 


NSE ஆல் பின்பற்றப்படும் ஆன்லைன் வர்த்தக முறையை விளக்கினார். பங்குச் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகள், முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான வழிமுறைகள் ஆகியவற்றை விளக்கினார்.  முதலீட்டாளர்களுக்கு சிறந்த வெகுமதிகள் வழங்கிய சிறந்த நிறுவனங்களின் பெயர்களைக் கூறினார்.  வர்த்தகத்தின் நுணுக்கங்கள், பங்குகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள எச்சரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் முதலீட்டிற்கு நேரம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். 

   கூட்டத்திற்கான எற்பாடுகளை முனைவர் சவேரியர்   துரைசாமி செய்தார். இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சௌந்தர்ய லக்ஷ்மி நன்றி கூறினார்.  இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் ரித்திகா ஜோஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். 350 வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments