BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் , இரண்டாம் நாளான நேற்று சதுரங்கப் போட்டி இனிதே துவங்கியது.40 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகள் தலா 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மொத்தம் 5 பிரிவுகளுக்கு 50 சான்றிதழ்களும்,பதக்கங்களும்,சுழற்கோப்பையும் பரிசளிக்கப்பட்டன.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் உஷா ராகவன் அமிர்த வித்யாலயம் பள்ளியின்(தமிழ்நாடு& புதுச்சேரி) உடற்கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர்

கண்ணன், கிலிங்மேஜிக் மேனேஜிங் டைரக்டர் மகேஷ் கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும்,சான்றிதழ்களையும் ,சுழற்கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினர்.


பள்ளித் தலைமை ஆசிரியை மாலதி அவர்கள் வரவேற்புரையும் , உடற்கல்வி ஆசிரியர் முருகபூபதி அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்.தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக இன்று யோகாசனப் போட்டி பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments