// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாலை மறியல்

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாலை மறியல்

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

தமிழகத்தில் சென்னை,கோவை, ஏர்வாடி,தேனி,கடலூர்,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 


இதனை கண்டித்து தமிழக முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திடீரென அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மீறி பாலக்கரை சாலையில் மறியல் ஈடுபட்டனர். 



இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய செய்தனர்.இதன் காரணமாக பாலக்கரை பகுதியில் அரை மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments