திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் கு. இராசரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவு இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் போந்தூர் கனகசுந்தரம்
அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 'நாம் மறந்த நமது முகம்'என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
தமிழர்கள் பின்பற்றிய செய்நன்றி மறவாமை, ஈகை போன்ற நல்லொழுக்க நெறிகளை இன்றைய தலைமுறையினர் மறக்காமல் பின்பற்ற வேண்டும் என்னும் பொருண்மையில் அமைந்த தமிழ் இலக்கியப் பாடல்களை மேற்கோள்காட்டிப் பேசியதோடு, சாதிப்பாகுபாடு ஒழிப்பு குறித்தும், பெண்கல்வி முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
முன்னதாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நல்க, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் இணைப்பேராசிரியர் முனைவர் இரா. இரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரித் துணைமுதல்வர்கள். தேர்வுநெறியாளர், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
நிருபர் ரூபன்
0 Comments