BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தமிழக பண்பாட்டு கழகம் சார்பில் விருது வழங்கும் விழா

தமிழக பண்பாட்டு கழகம் சார்பில் விருது வழங்கும் விழா

 தமிழக பண்பாட்டுக் கழகம் நடத்தும் 26 வது ஆண்டு கல்வி சேவையை பாராட்டி நாடு போற்றும் நல்லாசிரியர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு ராஜ கலைஞன் விருது வழங்கும் விழா திருச்சி தேவர் ஹால் மறைந்த அன்பில் பொய்யாமொழி நினைவு அரங்கில் நடைபெற்றது...


தொழிலதிபர் உஸ்மான் சாகிப் தலைமை தாங்கினார் கன்மலை அறக்கட்டளை நிறுவனர் வில்பட் எடிசன் வரவேற்புரை ஆற்றினார் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மூன்றாவது மண்டல தலைவர் மதிவாணன், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் சையது முகமது கலிபா சாகிப். முன்னிலை வகித்தனர்...



சமூக ஆர்வலர் தொழிலதிபர் அருண் சேகர், சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் சாதனை படைத்தவர்களுக்கு திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்





 லெஜன்ட் திரைப்பட இயக்குனர்கள் ஜேடி, ஜெர்ரி, அவர்களுக்கும் சன் டிவி கயல் தொடர் திரைப்பட நடிகை ஜானகி தேவி, அவர்களுக்கும் சன் டிவி சந்திரலேகா தொடர் சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்ட்கர்,  அவர்களுக்கும் விஜய் டிவி சுமங்கலி தொடர் சின்னத்திரை நடிகை சுமங்கலி, அவர்களுக்கும் விஜய் டிவி புகழ் நாட்டுப்புற பாடகி தேவகோட்டை அபிராமி. அவர்களுக்கும் மற்றும் நல்லசிரியர் விருதுகளும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகளும் வழங்கி திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் வழங்கி இந்த தேவர் ஹாலில் தான் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர் எல்லாம் இந்த அரங்கில் நாடகங்களையும் வழங்கி சிறப்பித்த இடம் என்று நினைவு கூர்ந்து வாழ்த்தி பேசினார் விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகப் பண்பாட்டுக் கழகத்தினுடைய தலைவர் முனைவர் ஜாகிர் உசேன் செய்திருந்தார்..


.விழாவில் சமூக ஆர்வலர் பாஸ்கர். மற்றும் நிகழ்ச்சிகளை இனிய தமிழில் ரவி அவர்கள் தொகுத்து வழங்கினார் மாலை சுந்தர் அவர்களின் குரு பிரியா இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Post a Comment

0 Comments