BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி தேசிய கல்லூரியில் ஆசிரியர் தின விழா

திருச்சி தேசிய கல்லூரியில் ஆசிரியர் தின விழா

103 பழம்பெருமையும் கல்விச்சேவையில் தனித்துவமும் கொண்டு விளங்கும் திருச்சி தேசியக்கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா செப்டம்பர் 5ஆம் நாள் கொண்டாடப்பெற்றது.கல்லுாரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் தம் வரவேற்புரை ஆற்றினார்..

 கல்லுாரி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய கல்வியாளர்  சாரநாதன் போன்றோரை நினைவுகூர்ந்தார். மாணவர்களின் முன்னேற்றத்தில் மனநிறைவுகொள்ளும் ஆசிரியப்பணி அருட்பணி எனக்கூறி அனைவரையும் வரவேற்றார்.

பேராசிரியர் எஸ்.சிவக்குமார், மண்ணியல் துறைத்தலைவர், மேனாள் முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களை ‌அறிமுகம் செய்தனர்.

கல்லுாரியின் முன்னேற்றத்தையே தன் மூச்சுக்காற்றாகக் கருதும் செயலர்

திருமிகு கா.ரகுநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களான கல்லுாரியின் மேனாள்

முதல்வர் முனைவர் கு.அன்பரசு, மற்றும் மேனாள் வணிகவியல் துறை பேராசிரியர்

முனைவர் ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கு சிறப்பு செய்து அவர்களின்

கல்விப்பணிகளைப் பாராட்டினார்.

முனைவர் கு.அன்பரசு அவர்கள் தம் சிறப்புரையில் கட்டிடங்கள்,

தொழில்நுட்ப வசதிகள், ஆய்வக வசதிகள் என அனைத்தையும் விட

ஆசிரியர்களின் கல்வித்திறனே கல்லுாரியின் முதன்மைச் செல்வமாகும்.

பேராசிரியர்கள் ஆய்வுப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பேராசிரியர் முனைவர் ஆர். ஸ்ரீனிவாசன் அவர்கள் தம் சிறப்புரையில்

பேராசிரியர்களிடம் படிப்பதை விட பேராசிரியர்களைப் படிக்க வேண்டும் என்றார்.

திருவரங்கம் அரங்கநாதப்பெருமான் திருக்கோயிலின் மேனாள் அறங்காவலர்

குழுத்தலைவர் திரு.பி.கே.தியாகராசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லுாரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் இராகவன், துணை

முதல்வர்கள், துறைத்தலைவர்கள், தேர்வு நெறியாளர், பேராசிரியர்கள்

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.

முனைவர் சா.நீலகண்டன் தமிழ்த்துறைப்பேராசிரியர் நிகழ்ச்சியைத் தொகுத்து

வழங்கினார்.

ஆசிரியர் தின செய்திக்குறிப்பு

நூற்றிமூன்றாண்டு பழம்பெருமையும் கல்விச்சேவையில் தனித்துவமும்

கொண்டு விளங்கும் திருச்சி தேசியக்கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா செப்டம்பர் 5

ஆம் நாள் கொண்டாடப்பெற்றது.கல்லுாரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் தம் வரவேற்புரையில் கல்லுாரி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய கல்வியாளர் திருமிகு சாரநாதன் போன்றோரை நினைவுகூர்ந்தார். மாணவர்களின் முன்னேற்றத்தில் மனநிறைவு கொள்ளும் ஆசிரியப்பணி அருட்பணி எனக்கூறி அனைவரையும் வரவேற்றார்.

பேராசிரியர் எஸ்.சிவக்குமார், மண்ணியல் துறைத்தலைவர், மேனாள்

முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களை

அறிமுகம் செய்தனர்.

கல்லுாரியின் முன்னேற்றத்தையே தன் மூச்சுக்காற்றாகக் கருதும் செயலர்

திருமிகு கா.ரகுநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களான கல்லுாரியின் மேனாள்

முதல்வர் முனைவர் கு.அன்பரசு, மற்றும் மேனாள் வணிகவியல் துறை பேராசிரியர்

முனைவர் ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கு சிறப்பு செய்து அவர்களின்

கல்விப்பணிகளைப் பாராட்டினார்.

முனைவர் கு.அன்பரசு அவர்கள் தம் சிறப்புரையில் கட்டிடங்கள்,

தொழில்நுட்ப வசதிகள், ஆய்வக வசதிகள் என அனைத்தையும் விட

ஆசிரியர்களின் கல்வித்திறனே கல்லுாரியின் முதன்மைச் செல்வமாகும்.

பேராசிரியர்கள் ஆய்வுப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பேராசிரியர் முனைவர் ஆர். ஸ்ரீனிவாசன் அவர்கள் தம் சிறப்புரையில்

பேராசிரியர்களிடம் படிப்பதை விட பேராசிரியர்களைப் படிக்க வேண்டும் என்றார்.

திருவரங்கம் அரங்கநாதப்பெருமான் திருக்கோயிலின் மேனாள் அறங்காவலர்

குழுத்தலைவர் திரு.பி.கே.தியாகராசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லுாரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் இராகவன், துணை

முதல்வர்கள், துறைத்தலைவர்கள், தேர்வு நெறியாளர், பேராசிரியர்கள்

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.முனைவர் சா.நீலகண்டன் தமிழ்த்துறைப்பேராசிரியர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments