BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** பஞ்சமி நிலங்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும்: பதிவுத்துறை எஸ்சி எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

பஞ்சமி நிலங்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும்: பதிவுத்துறை எஸ்சி எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு பதிவுத்துறை எஸ்சி, எஸ்டி பணியாளர் நல சங்கம் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆனந்த் ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். காப்பாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் இளவரசன் தீர்மானங்களை முன்மொழிந்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், ஓய்வு பெற்ற பதிவுத்துறை எஸ்சி எஸ்டி பணியாளர் சங்க தலைவர் மதுரை முத்து, பொதுச் செயலாளர் நாகராஜன், சட்ட ஆலோசகர் ராஜா, பொதுச் செயலாளர் திலகர், சட்ட ஆலோசகர் லஜபதிராய், மதுரை சமூக நீதி இயக்குனர் ஆறுமுகம், பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மேலாண்மை இயக்குனர் கணபதி குடும்பனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

துணைப் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், நிர்வாக குழு மற்றும்  உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பணி நியமன நாளின் முதுநிலை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியாளர்களின் கோரிக்கை மனுக்கள் மீது முன்னுரிமை மற்றும் அவர்களது குடும்ப சூழ்நிலை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.




கனிம வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை போன்று பதிவுத்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசின் வருவாய்துறை அரசாணைப்படி பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினரின் முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேண்டும் என்றே புறக்கணித்து, மன உளைச்சலுக்கும், நீதிமன்ற அலைக்கழிப்புக்கும் உள்ளாக்கும் சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் மீது வன்கொடுமை தட்டுச் சட்டப்பிரிவு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு ஒருமாதிரியாகவும், எஸ்சிஎஸ்டி அல்லாத இதர பிரிவினர்கள் வேறு மாதிரியாகவும், பாரபட்ச நிர்வாக நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செயல்படும் பொது ஊழியர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி உறுப்பினர்களுக்கான அரசாணை 65ஐ பதிவுத்துறையில் தொடர்ந்து புறக்கணித்து வருவதை தவிர்த்து, பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை, பூமிதானம், புறம்போக்கு மற்றும் முஸ்லிம் மக்களுக்கான வக்பு வாரிய நிலங்களை மட்டும் சேர்க்கப்பட்டு அந்நிலங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலங்கள் பதிவு செய்யப்பட்டால் போலி ஆவணமாக விசாரிக்கப்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments