BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி சாலைகளில் சூழ்ந்த மழைநீர்...! பொதுமக்கள் அவதி

திருச்சி சாலைகளில் சூழ்ந்த மழைநீர்...! பொதுமக்கள் அவதி

 திருச்சி ஸ்ரீரங்கம் வார்டு எண்: 1 மேலூர் ரோடு, நைட் சாயில் டெப்போ ரோடு, செல்வா நகரில் நேற்று பெய்த மழை காரணமாக, பத்து நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாததால் பல 7 வீட்டுக்குள் புகுந்தது மழைநீருடன் கழிவுநீர். இரவு முழுவதும் அங்குள்ள மக்கள் தூக்கமின்றி தவித்தனர். மாநகராட்சிக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கழிவுநீரில் மிதக்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். .உடனடியாக மாநகராட்சி துரிதகதியில் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்த நிலையில் திருச்சியில் நேற்று இரவு விடிய விடிய பல பகுதியில் கனமழை பெய்தது. திருச்சி மாநகரில் கொட்டிய மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது..



இன்று(26.09.2022) காலை சத்திரம் பேருந்து நிலையம் அருகில்  எஸ்.ஆர்.சி ஸ்கூல் செல்லும் வழியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி காட்சியளித்து. பள்ளி ,கல்லூரி மாணவிகள் சாலையில் செல்ல முடியாமல் நடைப்பாதையில் நடந்து நெரிசலில் சிக்கி பெரும் இடையூறாக இருந்தது.மாநகராட்சி பணியாளர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

Post a Comment

0 Comments