BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் புத்தக திருவிழா

திருச்சியில் புத்தக திருவிழா

 திருச்சி மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக பிரமாண்டமாக புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக பிரமாண்டமாக புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது...





நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவுடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் இந்த புத்தகக் கண்காட்சியை திருச்சி ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடத்துகின்றன. வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலன்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோா் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து அரங்குகளைப் பாா்வையிட்டனா்.



நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவின் இயக்குநா் யுவராஜ் மாலிக், கவிஞா் நந்தலாலா, மேயா் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.அப்துல் சமது, செ. ஸ்டாலின் குமாா், அ. செளந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் நாள்தோறும் முக்கிய ஆளுமைகள் பாராட்டப்படுகின்றனா்.



முதல்நாளான வெள்ளிக்கிழமை பத்ம விருது பெற்ற கலைமாமணி ஷேக் மகபூப் சுபானி, காலீசாபி மகபூப், மருத்துவா் பி.எஸ். மகாதவேன் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். புத்தகத் திருவிழா 25-ஆம் தேதி வரை தினமும் முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இங்கு 160 புத்தக அரங்குகள் அமைந்துள்ளன.


150-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப் புத்தகங்களுக்கும் விற்பனையில் 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கோளரங்கம், வான்நோக்குதல் காட்சியும் இடம்பெற்றுள்ளது. திருச்சி மாவட்ட எழுத்தாளா்களை சிறப்பிக்கும் வகையில் தனி புத்தக விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது

உணவு அரங்கு, குடிநீா் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மருத்துவச்சேவை, மாற்றுத்திறனாளா்-வண்டி ஏற்றும்பாதை, சிறுவா் விளையாட்டுப் பூங்கா, பணப்பரிவா்த்தனைகளுக்கான இணைய வசதி, கிராம ஊராட்சிகளில் இருந்து சிறப்புப்பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முதல்நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாலை நிகழ்வில், நீதியரசா் கே. சந்துரு, எழுத்தாளா் மதுக்கூா் ராமலிங்கம் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து கலைக்காவிரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செய்தியாளர் A.அஃப்ரின்

Post a Comment

0 Comments