BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் ஊட்டச்சத்து வார விழா

திருச்சியில் ஊட்டச்சத்து வார விழா

ஊட்டச்சத்து வார விழா கண்காட்சி திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து வார விழா கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா  நடைபெற்றது. 


கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா வழிகாட்டுதல்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ்  அங்கன்வாடி  பணியாளர்களும்  குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான வாழ்வை நோக்கி  தலைப்பில் ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படுகிறது.

 


ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிதல், வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல்  கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதே முக்கிய நோக்கம்.  சத்தான உணவு, சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில் தவறாமல் உண்போம் என்ற உறுதிமொழியை வளர் இளம் பருவத்தினர் ஏற்றுக்கொண்டனர். வளரிளம் பெண்களுக்கான ஆலோசனையினை மருத்துவர் சுப்பிரமணியன் எடுத்துரைத்தார். மாதவிடாய் கால சுகாதாரம் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் ஜான் மேரி எடுத்துரைத்தார். இயற்கை உணவு குறித்து அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்தார். மேற்கண்ட நிகழ்ச்சியினை திருச்சி மணிகண்டம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட மேற்பார்வையாளர் லஷ்மி ஏற்பாடு செய்திருந்தார்

Post a Comment

0 Comments