// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SDPI கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

SDPI கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

 திருச்சி தெற்கு மாவட்டம்,  மேற்கு தொகுதி உட்பட்ட  பீமநகர் பகுதி 51 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கிளை தலைவர் முகமது ஆசிப் தலைமையில் நேற்று  நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தெற்கு  மாவட்ட துணை தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட  செயலாளர் மதர்.Y.ஜமால் முகமது,SDTU மாவட்ட துணை தலைவர் மீரான் மைதீன்,மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 




இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பலர் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

மேலும் மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா, பீம நகர் கிளை துணைத் தலைவர் பக்ருதீன், கிளை துணைச் செயலாளர் உமர் அலி,கிளை பொருளாளர் அமீருதீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments