// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. 

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழகப் பாண்டியன், பிரேம்குமார், முகமது சுபேர், சிவக்குமார் மற்றும் விப்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நூலாசிரியர் விஜயகுமார்  திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் தொகுப்பு நூலினை அறிமுகப்படுத்தி பேசுகையில்,சேகரிப்புக்கலை என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல,அது வரலாறு, பண்பாடு, அறிவியல் மற்றும் சமூக நினைவுகளைப் பாதுகாக்கும் உயரிய பண்பாட்டு இயக்கமாகும். ஒரு சிறிய பொருளின் பின்னணியில் மறைந்திருக்கும் காலத்தின் சுவடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பாலமாகச் சேகரிப்பாளர்கள் திகழ்கின்றனர்.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய சேகரிப்புகளில் ஈடுபட்டு, அவற்றை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, பொது அறிவையும் வரலாற்று விழிப்புணர்வையும் பரப்பி வரும் சமகால சேகரிப்புக் 

கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பதிவு செய்யும் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments